லியோ ப்ரோமோ வீடியோ குறித்து படக்குழு பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட்.

தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ நேற்றைய முன் தினம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை ட்ரெண்டிங்காகி வருகிறது.

24 மணி நேரத்தில் லியோ ப்ரோமோ வீடியோ செய்த சாதனை.!! - படகுழுவின் லேட்டஸ்ட் அப்டேட்.!

இந்நிலையில் இந்த ப்ரோமோ வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் செய்திருக்கும் சாதனை குறித்து படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது. அதன்படி, லியோ ப்ரோமோ வெளியாகி 24 மணி நேரத்தில் 27 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த பதிவால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.