லியோ திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் லியோ.

படத்தின் கதைக்களம்:

சகோதரர்களான ஆண்டனி தாஸ்(சஞ்சய் தத்), ஹரால்டு தாஸ்(அர்ஜுன்) ஆகியோர் புகையிலை வியாபாரிகள் போல வாழ்ந்து கொண்டு சட்டவிரோதமாக போதைப் பொருள் வியாபாரம் செய்து வருவார்கள்.

ஆண்டனி தாஸின் மகன் லியோ (விஜய் ) போதைப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வார்.இப்படியான நிலையில் ஒருநாள் புகையிலை ஃபேக்டரியில் ஏற்படும் தீ விபத்தில் லியோ இறந்துவிட 20 வருடங்களுக்குப் பிறகு ஓரிடத்தில் பார்த்திபனாக ( விஜய்) மனைவி த்ரிஷாவுடன் வாழ்ந்து வருவது ஆண்டனி குடும்பத்திற்கு தெரிய வருகிறது.

இது பார்த்திபன் இல்லை லியோ தான் என அவரை தேடி வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது தான் இந்த படத்தின் பரபரப்பான கதைக்களம்.

தளபதி விஜய் ஒன் மேனாக படத்தில் மாஸ் காட்டுகிறார். சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் திறமையான நடிப்பை கொடுத்தாலும் படம் முழுவதும் பயணிக்கவில்லை.

ஆங்காங்கே சில தவறுகள் இருந்தாலும் விஜய் தனது நடிப்பால் அதையெல்லாம் ஸ்கோர் செய்துள்ளார். திரிஷா படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் திறம்பட நடித்துள்ளார்.

அனிருத் இசை பட்டய கிளப்ப லோகேஷ் தனது ஸ்டைலில் தூள் கிளப்பி உள்ளார்.மொத்தத்தில் லியோ ஒன் மேன் ஷோ.

REVIEW OVERVIEW
லியோ விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
leo-movie-reviewமொத்தத்தில் லியோ ஒன் மேன் ஷோ.