லியோ படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை படக்குழு வெளியிட உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து.

திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், பாபுஆண்டனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு ” ஹரோல்ட் தாஸ் வருகிறார் என்று நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரம் தொடர்பான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.