ஐமேக்ஸ் தரத்தில் லியோ திரைப்படம் வெளியாக என்று தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது இப்படத்திற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் லியோ படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்ப தரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ஐமேக்ஸ் வடிவில் வெளியாகும் இரண்டாவது தமிழ்த் திரைப்படமாக லியோ இருப்பதால் இந்த தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.