குழந்தைகளுக்கு மத்தியில் ஜெயிலர் பாடலுக்கு நடனமாடிய லெஜென் சரவணன் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தி லெஜன்ட் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் லெஜன்ட் சரவணன். ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து விரைவில் இவரது அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குழந்தைகளுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடிய லெஜன்ட் சரவணன் தனது அடுத்த படத்திற்கான கதை அமைந்து விட்டதாக கூறியிருந்தார். அதன் பிறகு அக்குழந்தைகளுடன் இணைந்து ஜெய்லர் திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ஹுக்கும் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.