தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் புது திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் இடங்களின் லிஸ்ட் வைரல் ஆகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் ரசிகர்களின் ஃபேவரட் நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் முன்னணி நடிகர்கள் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு தளங்களின் இடம் குறித்த லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் எங்கு நடக்கிறது தெரியுமா? - வைரலாகும் சூப்பர் லிஸ்ட்!!.

அதன்படி, நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 திரைப்படம் – திருப்பதி , நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் – சென்னை, தளபதி விஜயின் வாரிசு – எண்ணூர்(இறுதி கட்ட படப்பிடிப்பு), தல அஜித்தின் துணிவு – பாங்காக் (இறுதி கட்ட படப்பிடிப்பு), நடிகர் சூர்யாவின் சூர்யா 42 – கோவா, நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் – தென்காசி (முதல் கட்ட படப்பிடிப்பு), நடிகர் சிம்புவின் 10 தல – சென்னை ஆகிய இடங்களில் முன்னணி நட்சத்திரங்களின் தற்போதைய படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.