நடிகர் தனுஷ் செய்வதை காப்பியடித்து செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றன.

கோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆக உச்சத்தில் இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004 ஆம் ஆண்டில் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக இணையத்தில் பதிவு செய்திருந்தனர்.

தனுஷை காப்பியடிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - கமெண்ட்டில் கருத்துக்களை தெரிவித்து வரும் நெட்டிசன்கள்.

அதையடுத்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இரண்டு மகன்களுடன் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வசித்து வருகின்றார். அதன்பின் இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்ற நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் செய்வதை காப்பியடித்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அப்போது அப்படத்தின் பிரமோஷன் காக அமெரிக்காவிற்கு சென்ற தனுஷ் தனது இரண்டு மகன்களையும் அந்நிகழ்ச்சியில் அழைத்துச் சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

தனுஷை காப்பியடிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - கமெண்ட்டில் கருத்துக்களை தெரிவித்து வரும் நெட்டிசன்கள்.

அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. அதனைத் தொடர்ந்து உடனே இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இரண்டு மகன்கள் திரும்பி வீட்டிற்கு வந்தவுடன் கட்டியணைத்துக் கொண்டிருப்பது போல் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதேபோல் தற்போது பாலிவுட் நடிகை சாரா அலி கான் மும்பையில் நடந்த பார்ட்டியில் தனுஷை சந்தித்ததில் மகிழ்ச்சி என இன்ஸ்ட்ரா ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார்.

தனுஷை காப்பியடிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - கமெண்ட்டில் கருத்துக்களை தெரிவித்து வரும் நெட்டிசன்கள்.

அதை பார்த்த தனுஷும் என் ரிங்குவை சந்தித்ததில் மகிழ்ச்சி என பதிலளித்திருந்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தான் போனி கபூருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டால் ஸ்டோரியில் வெளியிட்டு போனி கபூர் அங்கிளை சந்தித்தது மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். இப்படி நடிகர் தனுஷ் செய்வதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காப்பி அடித்து செய்து வருவதை பார்த்த நொடிஷன்கள் இது தனுஷ் செய்வது போல் இருக்கிறது என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.