விஜய் ரசிகர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் ஒன்று காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Update on Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்.. பீஸ்ட் படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட்

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் என இருவர் நடிக்கின்றனர். மேலும் இயக்குனர் செல்வராகவன் உட்பட பலர் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில் தளபதி விஜய் இராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜனவரி 26-ஆம் தேதி விஜய் ராணுவ அதிகாரி உடையில் இருக்கும் போஸ்டர் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த லுக் விஜய் ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்.. பீஸ்ட் படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட்

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. மேலும் அனிருத் இசையில் படத்தின் முதல் சிங்கள் ட்ராக் பாடலும் விரைவில் வெளியாகும் என கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.