பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பிரியங்கா விஜே-வாக பணியாற்றி 10 ஆண்டுகள் நிறைவுற்றதை விஜய் தொலைக்காட்சி நினைவுப்படுத்தி கொண்டாடியது.

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக திகழும் விஜய் தொலைக்காட்சியில் பல முன்னணி தொகுப்பாளினிகள் பணியாற்றி வந்தனர். ஆனால் அவர்கள் ஒரு சில காரணங்களால் அந்த சேனலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி கடந்த பத்து வருடங்களாக தொகுப்பாளர் பணியை சிறப்பாக செய்து பல மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து தற்பொழுது வரை அசத்தி வரும் பிரபல தொகுப்பாளினி தான் பிரியங்கா தேஷ் பாண்டே.

10 வருட பயணத்தை திரும்பிப் பார்க்க வைத்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சி!… கதறி அழுத பிரியங்கா - வெளியான ப்ரோமோ வீடியோ.

இவர் தற்போது சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக், பிபி ஜோடிகள் சீசன் 2, ராஜு வீட்ல பார்ட்டி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தனது தனித்துவமான காமெடியின் மூலம் மக்களை என்டர்டைன்மென்ட் செய்து நிகழ்ச்சியை நடத்தி வரும் இவர் பல ரசிகர்களின் ஃபேவரட் தொகுப்பாளினி ஆவார்.

10 வருட பயணத்தை திரும்பிப் பார்க்க வைத்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சி!… கதறி அழுத பிரியங்கா - வெளியான ப்ரோமோ வீடியோ.

தற்பொழுது பிரியங்கா தொகுப்பாளினியாக பணியாற்றி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவூட்டும் வகையில் விஜய் டிவி “பிபி ஜோடிகள் சீசன் 2” என்ற நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். அதில் கண் கலங்கி நிற்கும் பிரியங்காவின் எமோஷனல் மொமென்டை இந்த வார ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.

BB Jodigal 2 | 21st August 2022 - Promo 1