லால் சலாம் திரைப்படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக இருக்கும் இப்படத்திற்கான பூஜை நடைபெற்றதை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படத்தின் சிறப்பு அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி லால் சலாம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்றுடன் தொடங்குகிறது என்ற மகிழ்ச்சியான தகவலை லைக்கா நிறுவனம் ஹோலி பண்டிகையின் வாழ்த்துக்களுடன் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.