அஸ்வின் ரசிகர்களால் குட்டி பட்டாசு பாடல் வீடியோ பெரும் சாதனையை படைத்துள்ளது.

Kutty Pattasu Song Record in YouTube : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவு பெற்றது.

இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் அஸ்வின். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, ஆபீஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் ராஜா ராணி சீரியலின் கன்னட ரீமேக்கிலும் நடித்திருந்தார்.

அஸ்வின் ரசிகர்களால் சாத்தியமான சாதனை.. குட்டி பட்டாஸ் பாடல் படைத்த பிரம்மாண்ட சாதனை.!!

இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக அஸ்வினுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவர் குட்டி பட்டாசு என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார்.

தற்போது இந்தப் பாடல் வீடியோ யூடியூப் பக்கத்தில் 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக அஸ்வின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.