Kuppathu Raja Review

Kuppathu Raja Review : எஸ் போகஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் குப்பத்து ராஜா.

படத்தின் கதைக்களம் :

சென்னையில் உள்ள ஒரு குப்பத்தை சேர்ந்த ஜி.வி பிரகாஷ் தண்ணி, தம், லவ் என ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருக்கிறார். இதே ஏரியாவில் மக்கள் மத்தியில் மதிப்பிற்குரிய ஒருவராக வாழ்ந்து வருகிறார் பார்த்திபன்.

ஆனால் பார்த்திபனை கண்டாலே ஜி.வி பிரகாஷுக்கு பிடிக்காது. இப்படியே போக ஒரு நாள் இவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு விடுகிறது.

அதன் பின்னர் திடீரென அந்த ஏரியாவில் இருந்து ஒரு சிறுவன் காணாமல் போகிறான். அடுத்த நாளே ஜி. வி பிரகாஷின் அப்பா எம்.எஸ் பாஸ்கர் கொலை செய்யப்படுகிறார்.

தன்னுடைய அப்பாவின் கொலைக்கு பார்த்திபன் தான் காரணம் என ஜி.வி பிரகாஷ் நினைத்து கொண்டு அவரை பழி வாங்க எண்ணுகிறார். ஆனால் இறுதியில் கொன்றவர் அவர் இல்லை என தெரிய வருகிறது.

அதன் பின் இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த கொலைக்கு யார் காரணம்? சிறுவனை காணாமல் போனதற்கும் எம்.எஸ் பாஸ்கரின் கொலைக்கும் என்ன தொடர்பு என்பதை எப்படி கண்டு பிடிக்கிறார்கள்? அதன் பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ஜி. வி பிரகாஷும் பார்த்திபனும் தர லோக்கலாக சென்னை பாஷை பேசி மிரட்டியுள்ளனர். ஜி.வி பிரகாஷின் அப்பாவாக எம்.எஸ் பாஸ்கர் வாழ்ந்துள்ளார். படத்தின் நாயகி பலாக் லால்வானி, பூனம் பாஜ்வா ஆகியோரும் அவர்களின் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர். வழக்கம் போல யோகி பாபு காமெடிக்கு பஞ்சமில்லை.

இசை :

இந்த படத்தில் நாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் ஜி. வி பிரகாஷே இசையமைத்துள்ளார். தர லோக்கலாக படத்திற்கு ஏற்றார் போல பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். பாடல்களும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் :

மகேஷ் முத்துசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய பிரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவு சென்னை ஏரியாவை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. எடிட்டிங் கச்சிதம்.

இயக்கம் :

இயக்குனராக அறிமுகமாகியுள்ள பாபா பாஸ்கரும் ஆக்ஷன், ரொமான்ஸ், லவ், எமோஷனல் என பக்கா பேக்கேஜாகவும் முதல் முதல் பாதியை கலகலப்பாகவும் இரண்டாம் பாதியை விறுவிறுப்பாகவும் கொண்டு சென்றுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. ஜி.வி பிரகாஷ், பார்த்திபன், எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு
2. பின்னணி இசை
3. சண்டை காட்சிகள்
4. யோகி பாபு, ஜி.வி பிரகாஷ் காமெடி கலாட்டா

தம்ப்ஸ் டவுன் :

1. படத்தின் நாயகியான பலாக் லால்வானியின் டப்பிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்ததில் குப்பத்து ராஜா பக்கா ஆக்ஷன் அண்ட் ரொமான்டிக் படம்.