பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.

KS Ravikumar in Upcoming Movie : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கேஎஸ் ரவிக்குமார். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆர்யன்கான் விவகாரம் : மத்திய அமைச்சரிடம், போதைப்பொருள் தடுப்பு அதிகாரி மனைவி மனு

மேலும் இயக்குனராக மட்டுமல்லாமல் படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார். பல வருடங்களாக எந்தவித படத்தையும் இயக்காமல் இருக்கும் இவர் தற்போது கூகுள் குட்டப்பன் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

விஷால் ரொம்ப Strict-ஆ இருப்பாருன்னு நினைச்சேன்! – Actress Mirnalini Ravi Cute Speech |EnemyPressMeet

இந்த நிலையில் அடுத்ததாக இவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்சின் தம்பி எல்வின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராகவா லாரன்ஸ் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கேஎஸ் ரவிக்குமார் இயக்க உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.