KPY Amuthavanan About Vadivel Balaji
KPY Amuthavanan About Vadivel Balaji

ஆசை நிறைவேறாமலேயே வடிவேல் பாலாஜி இறந்து விட்டதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார் விஜய் டிவி பிரபலமான அமுதவாணன்.

KPY Amuthavanan About Vadivel Balaji : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.

இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக நேற்று சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார் – வருத்தத்தில் திரையுலகம்..!

நேற்று வடிவேல் பாலாஜிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய் டிவி பிரபலமான அமுதவாணன் அளித்த பேட்டி ஒன்றில் வடிவேல் பாலாஜி தன்னுடைய இறுதி ஆசை நிறைவேறாமலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

அதாவது அது இது எது என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை நடத்த வேண்டும் என ஆசைப்பட்டார். அதுமட்டுமல்லாமல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என கூறி வந்தார்.

தற்போது அவருடைய இந்த ஆசைகள் நிறைவேறாமலேயே இறந்து விட்டது எங்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.