நடிகர் சந்தானத்தின் திரைப்படமான ‘கிக்’ திரைப்படத்தில் இணைந்திருக்கும் நடிகர் செந்தில் கேரக்டர் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்களில் ஒருவர் தான் செந்தில். இவர் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்திருக்கும் அனைத்து காமெடிகளும் தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் ஆகும்.

இந்நிலையில் நடிகர் செந்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துவரும் “கிக்” திரைப்படத்தில் முதல்முறையாக சந்தானத்துடன் இணைந்து செந்தில் கேசியோ என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

அந்த வித்தியாசமான கேரக்டரின் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னரே இப்படத்தில் ஃபயர் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடிகை கோவை சரளா நடிக்க இருப்பதாக அவரது கேரக்டர் புகைப்படம் நேற்றைய தினம் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.

அதனை தொடர்ந்து தற்பொழுது நடிகர் செந்தில் கேரக்டர் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த மூன்று காமெடி புயல்களும் கலந்து நடித்திருக்கும் இப்படத்தை காண்பதற்கும் ரசிகர்கள் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.