Kerala Theatre Owners About Master

கேரளா திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ள முடிவு விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Kerala Theatre Owners About Master : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் மற்றும் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவின் தீவிரமாக பரவிய இந்த வைரஸ் தடுப்பது கட்டுக்குள் வந்திருப்பதால் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது.

பல மாத காலங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 50 சதவீத இருக்ககளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் அனுமதி அளித்து வருகின்றன.

தமிழகத்தில் தளபதி விஜயின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதேபோல் கேரளாவில் 50 சதவீத இருக்கைகள் உடன் திரையரங்குகள் செயல்படலாம் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

ஆனால் கொரோனா பேரிடர் காலத்தில் மூடுப்பட்டிருந்த தியேட்டர்களுக்கு வரி விலக்கு, மின் கட்டண சலுகை ஆகியவற்றிற்குக் கோரிக்கை வைத்திருந்தனர்.

மேலும், ஜிஎஸ்டி, கேளிக்கை வரி, செஸ் வரி ஆகியவற்றையும் செலுத்தி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே வைத்து தியேட்டர்களைத் திறந்தால் அது தங்களுக்கு லாபகரமாக இருக்காது என கேரள பிலிம் சேம்பர் முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக தொடர்ந்து, தியேட்டர்களைத் திறக்காமல் மூடியே வைப்பது என முடிவெடுத்துள்ளனர். கேரளாவின் 13ஆம் தேதி மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் தளபதி விஜய்க்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருப்பதால் அவர்களுக்கு இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.