ரசிகரின் ஆசியை நிறைவேற்றிய கீர்த்தி சுரேஷின் பதிவு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ தனுஷின் தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு விஜய், விக்ரம், ரஜினி உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து டாப் ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருக்கும் இவர் தற்போது தெலுங்கு திரை உலகிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வருகிறது.

இந்த நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷிடம் ரசிகர் ஒருவர் “நான் நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த நாள் இப்போது வந்துவிட்டது. இன்று எனது பிறந்தநாள் உங்களின் வாழ்த்துக்கள் எனக்கு வேண்டும். லவ் யூ தலைவி” என்று பதிவிட்டு ஆசையுடன் கேட்டு இருக்கிறார். அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, “லவ் யூ டூ” என்று ஹார்டின் சிம்பலுடன் பதிவிட்டு அவரது ஆசையை நிறைவேற்றி குஷிப்படுத்தி இருக்கிறார். அந்தப் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.