கயல் சீரியல் மீண்டும் நடிகர் ஒருவர் மாற்றப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று கயல். திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று தொடர் சாதனை படைத்து வருகிறது.

கயல் சீரியலில் மீண்டும் மாற்றப்படும் நடிகர்.‌. இனி அவருக்கு பதில் இவர் தான் - வைரலாகும் போட்டோ.!!

சைத்ரா ரெட்டி நாயகியாக நடிக்க ராஜா ராணி சீரியல் சஞ்சீவ் நாயகனாக நடிக்கும் இந்த சீரியலில் கயலுக்கு தம்பியாக முதலில் அவினாஷ் நடித்து வந்தார். பிறகு சில காரணங்களால் அவர் இந்த சீரியல் இதை விட்டு விலக அவருக்கு பதிலாக நடிகர் ஹரி நடித்து வந்தார்.

ஹரி மாற்றப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது சில காரணங்களால் அவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இனி அவருடைய கதாபாத்திரத்தில் ஜீவா என்ற நடிகர் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

கயல் சீரியலில் மீண்டும் மாற்றப்படும் நடிகர்.‌. இனி அவருக்கு பதில் இவர் தான் - வைரலாகும் போட்டோ.!!