டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இந்த சீரியலை தொடர்பு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இந்த வெற்றியை கடந்து கவின் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆமாம், டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சதீஷ் இயக்கும் படத்தில் தான் கவின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.