Kasthuri Live With Arnab
Kasthuri Live With Arnab

அர்னாப் உடனான நேரலையில் கஸ்தூரி செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Kasthuri Live With Arnab : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் அர்னாப் உடனான விவாதத்தில் கஸ்தூரி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் சினிமாவைப் பற்றிய கங்கனா ரனாவத் கூறிய கருத்து குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

பொதுவாகவே அர்னாப் விவாதங்களின் போது மற்றவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்க மாட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.

ஒரே விமானத்தில் ரஜினி, கமல் விஜயகாந்த், சிம்பு.. ராஜா போல கெத்தா வந்திறங்கிய தளபதி – பலரும் பார்த்திடாத அரிய வீடியோ

அதே நிலைதான் இந்த லைவ் வீடியோவிலும் தொடர்ந்துள்ளது. தனக்கு பேச வாய்ப்பு வரும் என பொறுத்து பொறுத்து பார்த்த கஸ்தூரி கடைசியில் வெறுப்பாகி லைவ் வீடியோவிலேயே சாப்பிட தொடங்கி விட்டார்.

இதனை பார்த்த ரசிகர்கள் தன்னை பேசவே அனுமதிக்காத அர்னாப்புக்கு கஸ்தூரி சரியான பதிலடி கொடுத்திருப்பதாக கூறி வருகின்றனர்.