கஸ்தூரியை ஆபாசமாக பேசி அஜித் ரசிகர் ஒருவர் பதிவிட்ட டீவீட்டால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதில் சின்மயீயும் தலையிட்டு இருப்பது சர்ச்சையை பெரிதாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. அஜித் ரசிகர் என்ற பெயரில் சிலர் பெண்களை பற்றி அசிங்கமாக பேசி கொண்ட போது அந்த விவாதத்தில் கஸ்தூரியின் பெயரும் அடிப்பட்டது.

இதனால் அவர் அந்த விவாதங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். இதனையடுத்து அஜித், ஷாலினிக்கும் கோரிக்கை வைத்திருந்தார்.

தற்போது சின்மயீ இவர்கள் மீது ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் அளியுங்கள் என கூறியுள்ளார். சின்மயீயின் டீவீட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கஸ்தூரி தனிப்பட்ட நபர் சிலர் செய்த செயல்களால் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களையும் #DirtyAjithFans என குறிப்பிட்டது தவறு. அதற்கு நீங்களும் சப்போர்ட் செய்வது சரியல்ல என அவருடன் வாதம் செய்து வருகின்றனர்.