
கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபலம் முன்னணி இயக்குனராக திகழும் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து வரிகளில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடலான “சுத்தமுள்ள நெஞ்சம்” பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.