கோவாவில் சூர்யாவின் 50-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: ரசிகர்கள் உற்சாகம்..

Web Ads

சூர்யா தனது 50-வது பிறந்தநாளை 23-ந்தேதி கொண்டாடுகிறார். சென்னையிலும், கோவாவிலும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கின்றது.

சில நாட்களுக்கு முன்பே, சூர்யா தனது 46-வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னைக்கு வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து தற்போது கோவாவில் தன் குடும்பத்தினருடனும், நெருங்கிய நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.

லேட்டஸ்ட்டாக ஒரு புகைப்படம் சூர்யாவின் பிறந்தநாளின்போது எடுக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டு இருக்கின்றது. அந்த புகைப்படத்தில் சூர்யாவுடன் அவரது தம்பி கார்த்தியும் இருக்கின்றார்.

Web Ad 2

தன் அண்ணனின் பிறந்தநாளை கொண்டாட கார்த்தியும் தற்போது கோவாவிற்கு சென்றுள்ளார். அங்கு சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கார்த்தி கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் 50-வது பிறந்தநாளை மேலும் ஸ்பெஷலாக்க, அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் வெளியாக இருக்கின்றது. இது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

karthi participated in suriya birthday celebrations
karthi participated in suriya birthday celebrations