கர்ணன் படம் பற்றிய அடுத்த அதிரடியான அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.
Karnan Second Single From March 2 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த படத்தில் இருந்து கர்ணனை வரச்சொல்லுங்க என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த பாடலை தொடர்ந்து கர்ணன் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் டிராக் பாடல் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பை நடிகர் தனுஷூம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.