
விஜய் சேதுபதி படத்திற்கு டப்பிங் பேசி முடித்துள்ளார் அஜித் பட நாயகி கனிகா.
Kanika Dubbed to Vijay Sethupathi Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வரலாறு உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் கனிகா. அதன் பின்னர் மலையாள சினிமா பக்கம் சென்ற இவர் மலையாளத்தில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் இலங்கை ஈழத்து தமிழ் பெண்ணாக கனிகா நடித்துள்ளார். படத்துக்காக அவர் ஈழத்து தமிழில் டப்பிங் பேசியுள்ளார்.
இது குறித்து புகைப்படத்துடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். ஈழத்து தமிழ் பேச கற்றுக் கொண்ட பொழுது நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/CBCfhLKpY7q/?igshid=u3koml89xw4y
மேலும் கனிகா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CBKP67lpfsN/?igshid=1wrbq9nv6l02m
https://www.instagram.com/p/CBIApjYJhB4/?igshid=1jbz7jv05etwk
https://www.instagram.com/p/CA5euW8pJve/?igshid=p6xusw462qcy