Karan Johar Praises Atlee
Karan Johar Praises Atlee

தன்னையும் தளபதி விஜயின் பிகில் படத்தையும் பிரபல பாலிவுட் இயக்குனர் பாராட்டியதை பெருமையுடன் பதிவிட்டுள்ளார் அட்லி.

Karan Johar Praises Atlee : தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார்.

இவரது இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

மீண்டும் விஜய்யின் பிகில் படத்தை பார்த்த ராஜபக்சே மகன், அஜித் ரசிகர் வைத்த கோரிக்கையால் முட்டிக் கொண்ட மோதல்.!

அட்லீ மற்றும் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்த இந்தப் படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் பாராட்டியுள்ளார்.

அட்லி இயக்கிய பிகில் படத்தை பார்த்தேன். சூப்பர் எனக் கூறியது மட்டுமல்லாமல் அவர் ஒரு மேஜிக் மெஜிசியன் of மசாலா சினிமா எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தனுஷின் அசுரன் படத்தை பார்த்து வந்ததாகவும் கூறி தனுஷும் வெற்றிமாறனும் பாராட்டியுள்ளார்.

இந்தப் பதிவை இயக்குனர் அட்லி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

அதுலயும் இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.