கங்குவா படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

கிட்டத்தட்ட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முழுவதுமாக முடிவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இனி போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறும், அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் எதிர்பார்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.