ரசிகர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கையில் வைத்திருக்கும் இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் கமல்ஹாசன் திடீரென்று தனது ரசிகர்கள் சிலரை நேரில் அழைத்து அவர்களுடன் சோசியல் மீடியா குறித்து கலந்துரையாடி உள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், “சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக என்னையும், என் படங்களையும் கொண்டாடும் ரசிகர்களில் சிலரை சந்தித்தேன். சோஷியல் மீடியா வலிமை மிக்க ஊடகம். அதை நல்ல வழிகளில் பயன்படுத்திக்கொள்வது எப்படியென கருத்துப்பரிமாற்றம் செய்துகொண்டோம்”. என குறிப்பிட்டு ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

இதோ அந்தப் புகைப்படம்