அன்பறிவ் இயக்கும் ‘கமல்-237’ படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?

மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷுட் எப்போது என்ற கேள்விகள் தொடர்ந்த நிலையில், -கமல் -237- படம் பற்றி முக்கியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதத்தில இப்படம் துவங்கப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கமல், தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து kh 237 சம்பந்தமான பணிகளை கமல் துவங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், மலையாளத்தில் பல ஹிட் படங்களில் பணியாற்றிய திரைக்கதை எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன், கமல் 237 படத்தில் இணைந்தார். கும்பளங்கி நைட்ஸ், மகேஷிண்டே பிரதிகாரம் படங்களில் எழுத்தாளராக பணிபுரிந்துள்ள இவர் ‘தொண்டிமுத்தாலும் த்ரிக்சாக்ஷியும்’ படத்தின் இணை இயக்குனரும் கூட. தற்போது ஷ்யாம் புஷ்கரன் ‘கமல் 237’ ஸ்கிரிப்ட் சம்பந்தமான பணிகளை கவனிப்பதற்காக படத்தில் இணைந்துள்ளார்.

