லியோ 2 வில் கமல் – விஜய் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் “லியோ”. தளபதி விஜய் நடிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இது குறித்த அதிகாரிவபூர்வமான தகவல்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.