Project k படத்தில் நடிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கும் சம்பளம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் உலக நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘Project K’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்க அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டோர் ஏற்கனவே முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனும் நடிக்க இருப்பதாக படகுழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த தகவல் இணையதளத்தில் பயங்கரமாக வைரல் ஆனதை தொடர்ந்து தற்போது இப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக வழங்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.