சமூக வலைதள பக்கத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷினி நியூ ஹேர் ஸ்டைல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பல சூப்பரான படங்களில் நடித்து தற்பொழுது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவர் மலையாளம் மற்றும் தமிழில் பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் ஆவார். தமிழில் இவர் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ‘புத்தம் புது காலை’ என்கின்ற படத்திலும் நடித்திருந்தார்.

புதிய ஹேர் கட்டில் ஸ்டைலாக இருக்கும் மாநாடு பட நடிகை…!! நியூ லுக் போட்டோஸ் வைரஸ்!.

ஆனால் கல்யாணி அதிக அளவில் ரசிகர்களுக்கு பரிச்சயமானது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் தான். இப்படம் சிம்புக்கு மட்டுமின்றி நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களை கவர்ந்து வரும் வகையில் விதவிதமான ஆடையில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது புது ஹேர் ஸ்டைலில் வெளியிட்டு இருக்கும் புதிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.