கர்ணன் படத்தின் ரிலீசுக்கு முக்கிய காரணம் தளபதி விஜய் தான் என அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.
Kalaipuli S Thanu About Karnan Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக OTT வழியாக வெளியாக உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரிலீசுக்கு விஜய் தான் காரணம் என கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். எப்போது திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறதோ அப்போது தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என இருந்தேன்.
தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் அதனை நிறைவேற்றி விட்டது. வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது. இதனால் கர்ணன் படத்தை வெளியிட முடிவு செய்தேன் என தெரிவித்துள்ளார்.