நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கொண்டு உள்ள இவர் திருமணமாகி கடந்த ஆண்டு ஓர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அதற்குப் பிறகும் முக்கிய திரைப்படங்களில் மீண்டும் நடித்து அசத்தி வரும் காஜல் அகர்வால் இதற்கிடையில் பழையபடி உடல் எடையை குறைக்க விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.