
காவாலா பாட்டை பங்கம் பண்ணி வீடியோ பதிவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.
தமன்னா நாயகியாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் ட்ராக்காக காவாலா பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பியது. குறிப்பாக தமன்னாவின் கவர்ச்சி ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த பாடலை கவுண்டமணியின் காமெடி தீம் மியூசிக் உடன் சிங்க் செய்து நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பக்கா எடிட்டிங் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.