காவாலா பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Kaavaalaa song making video viral:

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், தமன்னா உள்ளிட்ட ஏராளமான பல முன்னணி பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தில் இருந்து அனிருத் இசையமைப்பில் கடந்த வாரம் முதல் பாடலாக தமன்னாவின் கவர்ச்சியான நடனத்தில் உருவான “காவாலா” என்னும் பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது. பட்டி தொட்டி எங்கும் வைரலான இப்பாடல் தொடர்ந்து ரசிகர்களால் ரீல் செய்யப்பட்டு இணையதளத்தை கலக்கி வருகிறது.

இந்த நிலையில் இப்பாடல் உருவான மேக்கிங் வீடியோவை படகுழுவினர் வெளியிட்டுள்ளனர். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.

YouTube video