
Kaatrin Mozhi Tamil Review : “மொழி”, “அழகிய தீயே”, “60 வயது மாநிறம்” உள்ளிட்ட தரமான படங்களின் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், லஷ்மி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மயில்சாமி, குமாரவேல், மோகன்ராம், உமா ஐயர், சாண்ட்ரா பிரஜன், டாடி சரவணன், மதுமிதா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க , “கிரியேட்டீவ் எண்டர்டெயினர்ஸ் “ஜி. தனஞ்ஜெயன், விக்ரம்குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில், பாப்டா மீடியா ஓர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரிலீஸ் செய்திருக்கும் படம் தான் “காற்றின் மொழி”.
சந்தர்ப்ப சூழ் நிலைகளால் 12-ம் வகுப்பு பாஸ் ஆகாது போன ஜோதிகாவால் அவரது அக்காக்கள் மாதிரி வங்கி உத்தியோகம், வசதியான வாழ்க்கை என மேல்தட்டு வாழ்க்கை வாழ முடியாத ஜோதிகா, மிமிக்ரி, ஸ்போர்ட்ஸ் டைலரிங் குக்கிங் என எல்லா வித திறமைகள் இருந்தும் எக்ஸ்போர்ட் கம்பெனி மேனேஜர் புருஷன் விதார்த்துக்கு வாழ்க்கைப் பட்டு ஒரு 12-13 வயது மகனுக்கு தாயாக வீட்டோடு அடைபட்டுக் கிடக்கிறார்.
அவரது திறமைகளை வெளி உலகிற்கு காட்டும் விதமாக ஒரு பிரபல எப்.எம் ரேடியோவின் மிட் நைட் புரோகிராம் ஒன்றில் பலருக்கும் அழகிய அந்தரங்க ஆலோசனை வழங்கும் பெண் ஜாக்கியாகும் வாய்ப்பு கிடைக்க., அந்த வேலையில் இரண்டொரு நாட்களிலேயே தன் திறமையை ப்ரூ செய்யும் ஜோதிகாவிற்கு ஆரம்ப நிலையிலேயே கொஞ்சம் குடும்ப பிரச்சினைகள் தலைதூக்க., கணவர் விதார்த்தின் உதவியுடன் அவற்றை ஜோதிகா தவிடு பொடியாக்கி ரேடியோ ஜாக்கியாக தொடர்ந்தாரா? அல்லது மீண்டும் ஹவுஸ் ஓய்ப்பாகவே காலம் தள்ளினாரா? என்னும் கரு, கதை , களம் தான் “காற்றின் மொழி” மொத்தப் படமும்.
மேற்படி கதையை எத்தனைக்கு எத்தனை ஹாஸ்யமாகவும் சுவரஸ்யமாகவும் காட்சிப்படுத்த முடியுமோ அத்தனைக்கு அத்தனை அழகாகவும், அம்சமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன் என்பது தான் இப்படத்தின் பெரும் பலம்.
ஜோதிகா, ராதாமோகனின் இயக்கத்தில் தான் நடித்த ”மொழி ” படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதில் வாழ்ந்த மாதிரியே இதிலும் வாழ்ந்திருக்கிறார். என்ன கொஞ்சம் வழக்கம் போலவே விஜயலட்சுமியாக ஓவர் ஆக்டிங் வாழ்க்கை. ஜோதிகான்னா அப்படித்தானே., அதனால் தப்பாகத் தெரியவில்லை.
விதார்த், பாலகிருஷ்ணனாக பக்கா பர்பாமென்ட்ஸ் காட்டியிருக்கிறார். மனைவியின் டேலண்ட்டை ஆரம்பத்தில் மெச்சி பின் அவரது வளர்ச்சி கண்டு மிரண்டு பின் வாழ்க்கையை புரிந்து கொண்டு வாழும் பாலு பாத்திரத்தில் பக்கா விதார்த்.
வித்தியாசமான கிக் லுக்கில் ரேடியோ ஹெட்டாக வரும் லஷ்மி மஞ்சு , தனிமையில் கடுப்பெடுத்த கஞ்ச மாலையாக எம்.எஸ்.பாஸ்கர், அதே தனிமையை வேறு மாதிரி கொண்டாடும் மனோபாலா, “முந்தானை முடிச்சு ” முருங்கைக்காய் மாதிரி, முந்திரி மகத்துவம் பேசும் மயில்சாமி, பொழப்புக்காக எப்.எம்.ரேடியோ ஆபிஸில் குப்பைக் கொட்டும் புரட்சி கவி குமாரவேல், ஜோவின் அப்பா மோகன்ராம், ஊறுகாய் மாமி உமா ஐயர், ஜாக்கி அஞ்சலியாக சாண்ட்ரா பிரஜன், சாப்பாடு சப்ளையர் – டாடி சரவணன், ஜிம் பெண்மதுமிதா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் தங்கள் பாத்திரமறிந்து பக்காவாக நடித்துள்ளனர்.
பிரவின் K. L. லின் படத்தொகுப்பு இந்தப் படத்திற்கு பக்கா தொகுப்பு. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் ஒரு குறையுமில்லை. A. H . காசிப்பின் இசையில் “காற்றின் மொழி” படத்தின் ” என்னென்ன என்னென்ன தருவாய் … ” உள்ளிட்ட பாடல் காட்சிகள் ஒவ்வொன்றும் பக்கா, பின்னணி இசையும் பிரமாதம்.
“மொழி”, “அழகிய தீயே “, “60 வயது மாநிறம்” உள்ளிட்ட தரமான படங்களின் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில், “காற்றின் மொழி” திரைப்படத்தில் காட்சிகள் ஒவ்வொன்றிலும் இருக்கும் யதார்த்தமும், லாஜிக்கும் தான் இப்படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றன!
அதிலும், எப்.எம் ரேடியோவில் “மதுவோடு பேசலாம்..” நிகழ்ச்சியில், தன்னை கொலைகாரனாக பீல் செய்யும், இரயில் என்ஜின் டிரைவருக்கு “இது மவுனமான நேரம் மனதில் என்ன பாரம்…” பாடலை கேட்டபடி இரயில் ஓட்டுங்கள் என ஜோ கூறும் அறிவுரையும், பிரா கடை விற்பனையாளருக்கு பெண்களின் மார்புக்கு பின் இருக்கும் அவர்களது மனசை பாருங்கள்… எனக் கூறிடும் அறிவுரையும் இந்தப்படத்திற்கு பெரிய ப்ளஸ்!
மொத்தத்தில் “காற்றின் மொழி’ அன்பெனும் அஸ்திரத்தை போதிக்கும் அழகிய “காதல் மொழி”.
