அதிர்ஷ்டமில்லாத விஜய் சேதுபதிக்கு டபுள் ஜாக்பாட் அடித்தது போல அமைந்துள்ள படம்தான் காத்துவாக்குல 2 காதல்.

Kaathu Vaakula Rendu Kadhal Movie Review : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் காத்துவாக்குல 2 காதல். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது.

அதிர்ஷ்டமில்லாத விஜய் சேதுபதிக்கு அடித்த டபுள் ஜாக்பாட்.. காத்துவாக்குல 2 காதல் படத்தின் விமர்சனம்

படத்தின் கதைக்களம் :

பிறக்கும்போதே அப்பாவை இழந்து விடுகிறார் விஜய் சேதுபதி. அம்மா படுத்த படுக்கையாகி விடுகிறார். அம்மாவைப் பார்க்கப் போனால் அவரது உடல் நிலை இன்னும் மோசமாகிறது. இப்படி அதிர்ஷ்டம் இல்லாத ஒரு நபராக இருந்து வரும் விஜய் சேதுபதிக்கு அவருடைய வாழ்க்கையில் நயன்தாரா மற்றும் சமந்தா என இருவர் வருகின்றனர். பின்னர் எல்லாம் டபுள் டபுளாக கிடைக்கிறது. இதனால் விஜய்சேதுபதி வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகிறது. ஒரு கட்டத்தில் சமந்தா, நயன்தாரா யாரை பிடிக்கும் என கேட்க பிரபு நடத்தும் நிகழ்ச்சியில் கேட்க இருவரையுமே பிடிக்கும். இவங்க ரெண்டு பேரையுமே கல்யாணம் செய்து கொள்கிறேன் என விஜய் சேதுபதி கூறுகிறார். அதன் பின்னர் என்ன நடந்தது? யாரை திருமணம் செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கலகலப்பான கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் : விஜய் சேதுபதி வழக்கம் போல் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

நயன்தாரா இந்த படத்தில் எலும்பும் தோலுமாக இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தாலும் தன்னுடைய நடிப்பால் அதையெல்லாம் பேலன்ஸ் செய்து விடுகிறார்.

அழகு பதுமையாக விஜய் சேதுபதிக்கு பர்பேக்ட் மேட்சாக நடித்துள்ளார் நடிகை சமந்தா. ஸ்ரீசாந்துடன் காதல் பிரேக் அப் ஆக அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் காதல் மலர்கிறது.

மேலும் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். வித்தியாசமான கதைக் களத்தை கையில் எடுத்து எமோஷனல், காமெடி என அனைத்திலும் தூள் கிளப்பியுள்ளார் விக்னேஷ் சிவன்.

அதிர்ஷ்டமில்லாத விஜய் சேதுபதிக்கு அடித்த டபுள் ஜாக்பாட்.. காத்துவாக்குல 2 காதல் படத்தின் விமர்சனம்

அனிருத் இசையில் பாடல்கள் மட்டும் இல்லாமல் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் கொடுக்க எடிட்டிங் கன கச்சிதமாக அமைந்துள்ளது.

தம்ப்ஸ் அப் :

1. விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பு

2. அனிருத் இசை

3. படத்தின் திரைக்கதை

தம்ப்ஸ் டவுன் :

1. லாஜிக்கல் தவறுகள்