Jayakumar Speech

Jayakumar Speech : பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “தேர்தலை பற்றி் கூறிய வெற்றிகரமான தோல்வி.. எனும் கருத்து பற்றி எங்களுக்கு தெரியாது.

ஆனால், ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் அவுட் என்ற உதாரணம் போல் இது இருக்கிறது” என்று அமைச்சர் ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

சமூக நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து, தமிழகத்தில் உள்ள முதியோர்களுக்கு நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி போடும் திட்டம் நேற்று காலை தொடங்கப்பட்டது.

இதையொட்டி சென்னை டான் போஸ்கோ முதியோர் விடுதியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சரோஜா ஆகியோர் முதியோர்களுக்கு இலவசமாக நிமோனியா காய்ச்சல் தடுப்பு ஊசி போடும் திட்டத்தை நேற்று காலை தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, “50 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு, தற்போது நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது.

இதனை தடுக்கும் விதமாக, சுகாதார துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து இலவசமாக நிமோனியா காய்ச்சலை தடுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஊசியின் மூலம் போடப்படும் மருந்தின் விலை ₹2 ஆயிரம். ஆனால், இந்த ஊசி, அரசு சார்பில் இலவசமாக போடப்படுகிறது.

மேலும், மேகதாது அணை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தமிழக அரசும், இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்” இவ்வாறு கூறினார்.

மேலும், 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பேசும்போது, ‘அந்தந்த மாநிலத்தில் உள்ள பிரச்னைகளை பொறுத்து, அவர்களுடைய வெற்றி வாய்ப்பு அமைந்துள்ளது.

இந்த தேர்தல் முடிவுகளால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்றார். மேலும், பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேர்தலை பற்றி அவர் கூறிய கருத்து பற்றி எங்களுக்கு தெரியாது.

ஆனால், அவரின் கருத்து, ஆபரேஷன் சக்சஸ்.. பேஷன்ட் அவுட் என்பது போல் இருக்கிறது. இவ்வாறு கூறினார்.