ஃப்ரீ புக்கிங்கில் அதிரடி காட்டி வருகிறது ஜவான் திரைப்படம்.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இதனை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி உள்ளார். நயன்தாரா, ப்ரியாமணி ஆகியோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க யோகி பாபு காமெடி நடிகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படியான நிலையில் ஃப்ரீ புக்கிங் மூலம் இதுவரை இந்த திரைப்படம் ரூ 25 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் ஜவான் திரைப்படம் ரிலீஸ்க்கு பிறகு பெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.