விஜய் சேதுபதியின் மிரட்டலான போஸ்டரை ஜவான் படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

தற்போது பாலிவுட் திரை உலகில் அறிமுகமாகியுள்ள இவர் தனது முதல் படமாக ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில் நயன்தாராவின் போஸ்டரை தொடர்ந்து இப்படத்தில் வில்லனாக நடித்து இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மிரட்டலான லுக்கில் இருக்கும் விஜய் சேதுபதியை ரசித்தபடி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.