நடிகை ஜான்வி கபூர் திரையரங்கில் தனது படத்தின் ப்ரோமோஷனுகாக ரசிகர்களுக்கு பாப்கான் விற்று மனதை கவர்ந்திருக்கிறார்.

பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகளான இவர் தடாக் என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் தற்போது மிலி திரைப்படம் உருவாகியுள்ளது.

புதுமையான முறையில் படத்திற்கு பிரமோஷன் செய்த ஜான்விகபூர்!!.. ரசிகர்களை வியக்க வைக்கும் வீடியோ வைரல்!.

இப்படம் வரும் 4 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில். ஜான்வி கபூர் இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேளையில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார். அந்த வகையில் ஜான்வி தற்போது டெல்லியில் உள்ள சினிமா தியேட்டரில் ரசிகர்களின் மனதை கவருவதற்காக பாப்கான் விற்றுள்ளார். இப்படி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஜான்விகபூரின் இந்த அசர வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.