ஒரு சீனுக்காக ரூ. 4.5 கோடி என்பது அதிகம்: ‘ஜனநாயகன்’ பட அப்டேட்ஸ்..

Web Ads

‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. தற்போது இப்படம் பற்றி வைரலாகும் தகவல் பார்ப்போம்.

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இல்லை. அப்படத்தில் ‘குட் டச் பேட் டச்’ பற்றி பாலகிருஷ்ணா பேசிய காட்சியை மட்டும் தான் ‘ஜனநாயகன்’ படத்தில் வைத்திருக்கிறார்கள்.

இதனால் முறைப்படி, அந்த ஒரு காட்சியை எடுத்துக் கொள்ள ‘பகவந்த் கேசரி’ பட குழுவை அணுகி, அதன் உரிமத்தை ரூ. 4.5 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள். அரசியல் தலைவரான விஜய், மக்களிடம் ‘குட் டச் பேட் டச்’ பற்றி பேசினால், அது பெரிய அளவில் ரீச்சாகும் என நம்புகிறார் இயக்குனர் ஹெச்.வினோத்.

அனுமதி பெறாமல் ஒரு காட்சியை வைத்து, அது தொடர்பாக யாரும் வக்கீல் நோட்டீஸ் விட்டுவிடக் கூடாது என்பதில் ‘ஜனநாயகன்’ படக்குழு கவனமாக இருக்கிறது. இதனால் ஒரேயொரு சீன் ஆனாலும் அதனை முறையாக தெரிவித்து உரிமம் பெற்றிருக்கிறது. இருந்தாலும், ஒரு சீனுக்கு 4.5 கோடி என்பது மிக அதிகம்தான் எனவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விஜய் அரசியலில் கவனம் செலுத்திக் கொண்டே படங்களிலும் நடித்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள். ஆனால், ஒரு வாட்டி முடிவு செய்துவிட்டால் விஜய்ணா அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார். அதனால், நடிப்புக்கு முழுக்கு போடும் முடிவில் இருந்து பின்வாங்குவது என்கிற பேச்சுக்கே இடமில்லை எனவும் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இது குறித்து ‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள பூஜா ஹெக்டே
கூறியதாவது, ‘இது விஜய் சாரின் கடைசிப் படம் என்பதை நினைக்கும்போது எனக்கு கவலையாக இருக்கிறது.

அவரின் படம் பார்க்க அனைவருக்கும் பிடிக்கும். எனக்கு அவர் படங்கள் ரொம்ப இஷ்டம். ஜனநாயகனை விஜய்யின் திரைப் பயணத்தின் கொண்டாட்டமாக பார்க்க வேண்டும்’ என்றார்.

jananayagan movie team spends rs 4 crore for a reason
jananayagan movie team spends rs 4 crore for a reason