விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ பட டீசர் வெளியீடு எப்போது?

‘ஐனநாயகன்’ படத்தின் டீசர் வெளியீடு பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

எச்.வினொத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்ததும் விஜய் முழு நேர அரசியலில் இறங்குகிறார்.

‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அண்மையில் கொடைக்கானலில் ‘ஜனநாயகன்’ ஷூட்டிங் நடைபெற்றது. இதில் விஜய் கலந்துகொண்டார். இதையடுத்து, சென்னை சென்ற படக்குழு, இந்த வார இறுதிக்குள் ‘ஜனநாயகன்’ படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், விரைவில் அப்படத்தின் டீசரை படக்குழு ரிலீஸ் செய்ய உள்ளது.

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ந் தேதி இப்படத்தின் டீசர் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்த நாள் ட்ரீட் ஆக இந்த டீசர் ரிலீஸ் அமையும்.

ஜனநாயகன் திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி 9-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் விஜய்யின் TVK கட்சி ரெபரன்ஸ் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இதில் நடிகர் விஜய் தமிழ் வெற்றி கொண்டான் என்கிற பெயரில் நடிப்பதாக கூறப்படுகிறது.

jana nayagan movie teaser release on june22
jana nayagan movie teaser release on june22