ரோகிணி திரையரங்கில் ஜெயிலர் திரைப்படத்திற்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசை அமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டிக்கெட் திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் கடந்த சில வாரங்களாக ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த மோதலும் பயங்கரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கமாக உள்ள ரோகிணி திரையரங்கில் விற்கப்படும் டிக்கெட்களில் “#ThalaivarNirandharam” (தலைவர் நிரந்தரம்) என்ற ஹேஷ்டேக்குடன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் ட்ரெண்டிங்காகி வருகிறது.