ஜெயிலர் திரைப்படத்தின் சக்சஸ் பார்ட்டி போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மிகப்பெரிய ரசிகர்களைக் கொண்டுள்ள அவரது நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படம் வெளியான நாள் முதல் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூலில் சாதனை படைத்து வருகிறது. சமீபத்தில் இப்படம் உலக அளவில் ரூபாய் 5025 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்காததால் இதன் மிகப்பெரிய வெற்றியை ஜெயிலர் படக்குழுவினர் ஒன்றாக இணைந்து சைலன்டாக “தலைவர் நிரந்தரம்” என குறிப்பிட்டு இருக்கும் கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் படக்குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்துடன், இயக்குனர் நெல்சன், அனிருத், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் இணைந்துள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.