ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரை உலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அனிருத் இசையமைப்பில் ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தை அதிர விட்டு வருகிறது. இப்படம் திரைக்கு வர இன்னும் சிறிது நாட்களே இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு நேற்றைய தினம் அறிவித்திருந்தது. அதன்படி ஜெய்லர் திரைப்படத்தின் டிரைலரை (Showcase) படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.