ஜெய்லர் திரைப்படத்தின் ரன்னிங் டைம் அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் “ஜெயிலர்” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.

அதிரடியான சண்டை படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்னும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி மிரட்டியுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து அனிருத் இசையமைப்பில் உருவாகி இருந்த காவாலா மற்றும் ஹுக்கும் உள்ளிட்ட பாடல்கள் வெளியானது. இப்பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையதளத்தை தெறிக்க விட்டு வருகிறது. மேலும் வரும் ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், ஜெய்லர் திரைப்படத்திற்கான சென்சார் பணிகள் நிறைவடைந்ததாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் முதல் பாதி 1 மணி நேரம் 19 நிமிடங்கள், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 30 நிமிடங்கள் என குறிப்பிட்டு படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் இருக்கும் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.