ஜெயிலர் படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடித்துள்ளார். தன்னுடைய மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி மற்றும் பேரன் ரித்திக் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், யோகி பாபு உட்பட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

உதவி கமிஷ்னராக பணி புரியும் வசந்தை சிலை கடத்தல் கும்பல் ஒன்று கொன்று விட அதன் பிறகு ரஜினிகாந்த் என்ன செய்தார்? மகனை கொன்றவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எதார்த்தமான நடிப்பை கொடுத்ததோடு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டலான நடிப்பையும் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கும் வகையிலும் நடிப்பை கொடுத்துள்ளார்.

அனிருத்தின் இசை மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. விநாயகன் வித்தியாசமான வில்லனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ‌

பீஸ்ட் தோல்வியால் நெல்சன் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என அலறி ஆராய்ந்து படத்தை கொண்டு சென்றுள்ளார்.

மொத்தத்தில் ஜெயிலர் ரஜினி ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்