ஜெயிலர் படம் குறித்து பிரபல நடிகர் பகிர்ந்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ஜெய்லர். நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, சிவராஜ்குமார் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பல நட்சத்திரங்கள் பகிர்ந்து இருந்த சுவாரசியமான தகவல்களும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் வசந்த் ரவி பகிர்ந்திருக்கும் சமீபத்திய பேட்டியின் தகவலும் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், ஜெய்லர் படத்தை நான் ஒப்புக் கொள்ள முக்கிய காரணம் ரஜினி சார் மற்றும் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளும் விஷயங்களுக்காக மட்டும் தான். என்னை 70 வயதிலும் பிசியாக வைத்துக் கொள்ளும்படி ரஜினி சார் என்னிடம் அறிவுரை கூறினார். இந்த படத்தை பற்றி ஒரு விஷயம் என்னால் உறுதியாக சொல்ல முடியும், ஜெயிலர் கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது”. என்று கூறி இருக்கிறார். மேலும் நெல்சனிடம் ரியலிஸ்டிக் மீட்டரை கமர்ஷியல் டெம்ப்ளேட்டில் சொல்லும் திறமையுள்ளது. டார்க் காமெடியை டெட்பான் முக பாவனையோடு சொல்லும் அவருடைய ஸ்டைல் தமிழ் சினிமாவிற்கு புதியதாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.